சஞ்சீவ படுகொலை தொடர்பில் 12 பேர் கைது


கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவரான அவர் கொலை செய்யப்பட்டது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் இருவரும் கொலைத்திட்டம் போட பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகளை வழங்கியது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post