மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு சென்ற பேருந்து, எதிரே வந்த லொறியுடன் மோதியதில் 41 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் 48 பயணிகள் இருந்தனர், இதில் சிலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.