மும்பையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், இந்தியா பிசினஸ் குரூப் (IBG) உடன் இணைந்து, சரக்கு அனுப்புதல், கப்பல் போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 17 மூத்த நிர்வாக அதிகாரிகளின் பங்கேற்புடன், வணிக நெட்வொர்க்கிங் அமர்வை ஏற்பாடு செய்துள்ளது.
IBG என்பது வர்த்தக கவுன்சில் மற்றும் வர்த்தக சபையாக செயல்பட்டு, இந்திய வணிகங்களை உலகளாவிய நிறுவனங்களாக உருவாக்குவதற்கான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்குகிறது.
கப்பல் போக்குவரத்து, வர்த்தகம், தளவாடங்கள், பயணம் மற்றும் 3D அனிமேஷன் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனங்களின் குழுவான MendisOne குழுவும் இந்த அமர்வில் கலந்துகொண்டது. மும்பையில் உள்ள இலங்கையின் பதில் கொன்சல் ஜெனரல் ஷிராணி ஆரியரத்ன, MendisOne குழுமத்தின் தலைவர் ரோஹித மெண்டிஸை IBG இன் CEO மற்றும் பிற பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்திய நிறுவனங்கள் பரஸ்பர வளர்ச்சிக்காக தலைவர் மெண்டிஸுடன் நடந்த நெட்வொர்க்கிங் அமர்வில் கலந்து கொண்டன. அவர்கள் எல்லை தாண்டிய வணிக வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின. இந்தியாவின் தளவாடங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தலைவர் மெண்டிஸ் தனது நம்பிக்கையை பகிர்ந்துகொண்டார்.