சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு நிறுத்தப்படும் என கூறப்பட்ட செய்தி முற்றிலும் தவறானது என கிராம அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் செயலகம் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவுகளை 7,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தகவல்களை புதுப்பிக்கும் செயல்முறை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் இதனால் பொதுமக்கள் பெறும் நன்மைகள் பாதிக்கப்படாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் தகவலின்படி, 47,244 சிறுநீரக நோயாளிகள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கூறிய எண்ணின் துல்லியத்தை உறுதிப்படுத்திய பிறகு தகவல் புதுப்பிக்கப்படும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.