மும்பை தாக்குதல் குற்றவாளி நாடுகடத்தல்

மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளியான தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


ராணாவை நாடு கடத்த இந்தியா கோரியுள்ள காரணங்கள் காரணமாக உயர்நீதிமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி கடல் வழியாக மும்பைக்கு வந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இதில் 6 அமெரிக்கர்கள் உள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் போலீசாரால் உயிருடன் பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார்.

மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி தஹவ்வூர் ஹுசைன் ராணா 2009ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். மும்பை தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாதி டேவிட் ஹெட்லியின் உதவியுடன் கனடா குடியுரிமை பெற்ற ராணா சதித்திட்டம் உருவாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தஹவ்வூர் ராணா அமெரிக்க சிறையில் உள்ளார். இந்தியாவுக்கு அவர் வருவதற்கான விசாரணை நடவடிக்கைகள் ராஜீய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும் இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க உயர் நீதிமன்றம் இன்று (25) இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

முந்தையதாக ராணா சான்பிரான்சிஸ்கோவில் தன்னை இந்தியாவுக்கு அனுப்பாமல் தடுக்க கோரியுள்ளார்.
Previous Post Next Post