யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் ரம்பேவ பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனது வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத விஐபி விளக்குகளைப் பயன்படுத்தியதற்காக பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வைரல் வீடியோக்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.