இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்

யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய அரசியல் பிரமுகருமான மாவை சேனாதிராஜா இன்று (29) காலமானார். அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.


கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாவை சேனாதிராஜா, சிகிச்சை பலனின்றி இன்றிரவு உயிரிழந்ததாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார். இந்த தகவலை அவரது குடும்ப உறுப்பினர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாவை சேனாதிராஜாவின் மறைவுச் செய்தி அறிந்ததும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீநேசன், கோடீஸ்வரன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ப. அரியநேத்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விரைந்தனர்.

மாவை சேனாதிராஜாவின் மரணம் தமிழ் அரசியல் களத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இழப்பிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous Post Next Post