பண்டாரவளையில் மண்சரிவினால் ஏற்பட்ட விபத்து

 ஞாயிற்றுக்கிழமை (05) பண்டாரவளை - தியத்தலாவ வீதியின் அபத்தென்ன வத்தை பகுதியில் கெப் வண்டியொன்று 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்தவர்கள் 44, 36 மற்றும் 14 வயதுடைய பண்டாரவளை அவலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

அம்பத்தன்ன பகுதியில் வீதிக்கு அருகில் கெப் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த போது மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Previous Post Next Post