கடந்த ஒன்பது ஆண்டுகளாக கனடாவின் பிரதமராக உள்ள ஜஸ்டின் ரூட்டோ தற்போது எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிட்டு தனது பதவியை விலக்க முடிவு செய்துள்ளார்.
“என் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுத்த பிறகு நான் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்புகிறேன்” என்று 53 வயதான ரூட்டோ நேற்று (06) திங்களன்று ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
2015-ஆம் ஆண்டில் பிரதமராக இருந்தபோது முதல் முறையாக கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் நான் பாடுபட்டேன். நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக நான் உழைத்தேன். கொரோனா காலத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவியதை நான் பார்த்தேன். வட அமெரிக்காவில் தடையில்லா வர்த்தகத்தை நிலைநாட்டுவதற்காகவும் நான் முயற்சித்தேன் என்றார்.
தனது முந்தைய செயல்பாடுகளை விவரித்த பிறகு, அவர் தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார்.
குடும்பத்துடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்திய பிறகு, பதவி விலகும் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். தனது வெற்றிக்கு குடும்பத்தின் ஆதரவு முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். தனது பதவி விலகல் முடிவை நேற்றைய இரவு உணவின் போது குழந்தைகளிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்