அமெரிக்கவில் இடம் பெற்ற விபத்தில் இளம் இந்திய மாணவி உயிரிழந்தார்

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நள்ளிரவில் ஒரு வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதிய விபத்தால் நிகழ்ந்தது.


NDTV செய்தி வெளியிட்ட தகவலின்படி  பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார். அவர் நாக ஸ்ரீ வந்தனா பரிமளா என அழைக்கப்படும் 26 வயதான இவர் மெம்பிஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பில் படித்து வந்தார். ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 2022ஆம் ஆண்டு தனது கல்விக்காக அமெரிக்காவுக்கு வந்தார்.

காயமடைந்த பவன் மற்றும் நிகித் ஆகிய இரு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Previous Post Next Post