மேலும், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகிய குறைந்த காற்றழுத்த மண்டலம் மேலும் வலுப்பெற்று, எதிர்வரும் 11 ஆம் தேதி இலங்கை - தமிழக கடற்பரப்பை அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
அதற்கேற்ப, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.