தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழமான கடற்பகுதியில் மீன்பிடி மற்றும் கடல் கப்பல்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை-தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்பின்படி, வரும் 11ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்துடன் தற்காலிகமாக பலத்த மழை பெய்யக்கூடும். இதனால் மிகவும் கொந்தளிப்பான நிலைமைகள் ஏற்படக்கூடும் என்பதை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.