மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கடந்த காலங்களில் வாகனங்களுக்கு வழங்கிய தற்காலிக இலக்கத் தகடுகள் 2024 ஆம் ஆண்டு திசெம்பர் 15 ஆம் தேதி பிறகு செல்லாது என அறிவித்துள்ளது.
இந்த திகதிக்கு பிறகு தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதால் அந்தத் திகதிக்கு முன் நிரந்தர இலக்கத் தகடுகளைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நிரந்தர இலக்கத் தகடுகளை வழங்கும் செயல்முறை வழக்கமாக நடைபெற்று வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் திரு. நிஷாந்த அனுருத்த வீரசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.