நாடளாவிய அளவில் வாகன விபத்துகளை குறைக்க பொலிஸாரால் புதிய போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிகளை மீறி தொலைதூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் இயக்குவதைப் பற்றிய விசாரணை முக்கியமாக நடைபெற்று வருகிறது.
பயணிகள் பஸ்களை சோதிக்க சிவில் உடையில் உள்ள உத்தியோகத்தர்கள் பணியாற்றுவதாகவும் நீண்ட தூர சேவையில் பயணிக்கும் பஸ்களில் அவர்கள் அதிக தூரம் பயணிக்கின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கவனக்குறைவாக வாகனம் இயக்குதல், கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்துதல், பாதசாரி கடவைகளில் வாகனங்களை முந்திச் செல்லுதல் மற்றும் அதிவேகமாகச் செல்லுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர் சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.