நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பயணித்த விமானம் கனமழையின் காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் சில மணி நேரம் சுற்றி இருந்ததாக தகவல்கள் வந்துள்ளன.
சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் இண்டிகோ விமானம் மோசமான வானிலையால் 20 நிமிடங்கள் வானில் சுற்றி இருந்தது. நான்கு ஐந்து மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் வானிலை காரணமாக தாமதமாகி விட்டது. மதுரை அருகே சென்றபோது மழை மேகங்கள் சூழ்ந்திருந்ததால் உடனடியாக தரையிறங்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், சிறிது நேரம் வானில் சுற்றி இருந்ததாகவும், பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.