ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்ய உள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் இதை தெரிவித்தார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி நிதியமைச்சர் ஆகியோர் கூட பங்கேற்க உள்ளனர் எனவும் அவர் கூறினார்.