இந்த வருடம் இலங்கையர்களுக்கு உண்மையில் மாற்றத்தை உருவாக்கும் ஆண்டாக இருக்கிறது. நாட்டின் மக்கள் தூய்மையான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட அரசியல் கலாச்சாரம் மற்றும் பச்சாதாப சமூகம், பிரிவினைக்கு எதிரான ஒற்றுமையை உருவாக்குவதில் முன்வருகிறார்கள்.
ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக, பொருளாதாரம், தொழில் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் நாட்டை முன்னேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஒவ்வொரு குடிமகனும் இன, பாலினம், மதம் போன்ற தடைகளை மீறி அமைதியான சுதந்திரமான கண்ணியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவது எங்கள் நோக்கம்.
ஒரு தேசமாக ஒன்றிணைவதற்கான பல வாய்ப்புகள் கடந்த காலங்களில் எங்களுக்கு கிடைத்துள்ளன. ஆனால் அவற்றின் முழு பயன்களை நாம் உணரவில்லை. இப்போது இந்த வாய்ப்புகளை இழக்காமல் ஒன்றாக செயல்பட்டு பாதுகாக்க வேண்டும். இக்கட்டான காலத்தில் அரசு பொதுமக்களுக்கு சேவை செய்ய முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறது. எனவே 2025 ஆம் ஆண்டில் நாங்கள் உறுதியாக முன்னேற வேண்டும் என்று அனைவருக்கும் வேண்டுகிறேன்.
ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செல்லும் பயணம் சவாலானதாக இருக்கலாம் ஆனால் அந்த இலக்கை அடைவதற்கான முக்கிய நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம். நம்பிக்கையுடன் புத்தாண்டின் வாசலை நெருங்கும்போது அமைதியான மகிழ்ச்சியான மற்றும் வளமான 2025 க்கு அனைத்து குடிமக்களுக்கும் வாழ்த்துகள்.
இந்த புத்தாண்டில் வெற்றியை அடையவும் இலங்கையின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து வேறுபாடுகளை மறந்து ஒரே நோக்கத்துடன் இணைவோம். "இலங்கை" என்ற பெயரை உலகில் பெருமை மற்றும் செழுமை கொண்ட நாடாக மீண்டும் நிலைநாட்டுவதில் நமது கவனம் இருக்க வேண்டும் என தன் புது வருட வாழ்த்து செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.