கனடாவில் சிகிச்சைக்காக காத்திருந்த நபர் மரணம்

கனடாவின் மன்றியால் பகுதியில் சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவர் மரணித்துள்ளார்.



சிகிச்சை பெறுவதற்காக சுமார் 6 மணித்தியாலங்கள் காத்திருந்த 39 வயதான அடம் போர்கோயிங் என்ற நபர் உயிரிழந்துள்ளார். அவர் இசிஜி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெஞ்சு வலியால் அவர் மருத்துவமனையின் உதவியை நாடியுள்ளார். கனடாவில் சிகிச்சைக்காக காத்திருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

காத்திருப்பின் போது உரிய சிகிச்சை வழங்கப்படாத நிலையில், குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பல தரப்பினரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Previous Post Next Post