பள்ளிக் குழந்தைகளின் நலன் சார் கொள்கை முடிவுகளை எடுங்கள்: பிரதமர்

பொது சேவைகளை வழங்குபவர்கள் என்ற வகையில், அதிகாரிகள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.


மாணவர் நலன் சார்ந்த தரவுகளின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் தீர்மானங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும், பொது சேவை வழங்கும் குழுவாக அதிகாரிகள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கொழும்பு அறக்கட்டளையில்  இன்று (11) நடைபெற்ற "கல்வி முறையை மாற்றுவதற்கான பொருத்தமான உத்திகளைத் தயாரித்தல்" என்ற தலைப்பிலான செயலமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

புதிய அரசின் கொள்கை அறிக்கையின் அடிப்படையில், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி, தொழிற்பயிற்சி வரை கல்வி அளவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் உரையாற்றுகையில்.

கல்வி மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அறிவைப் பெறுவதைத் தாண்டி, தனிமனித மற்றும் சமூக மாற்றம் இருக்க வேண்டும். இந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கல்வி முறை தேவை. உலகிற்குத் தங்களைத் திறக்கும் வாய்ப்பு நம் குழந்தைகளுக்கு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூகப் பொறுப்பை உணர வேண்டும். நாம் தனிமனிதனாக மட்டுமல்ல, சமூகமாகவும் வளர வேண்டும். இதற்கான சமூகப் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது அறிவு மற்றும் திறன்களைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கல்வி ஒரு பண்டம் அல்ல. பரிவர்த்தனையாக மாற்றிவிட்டோம். கல்வியை பரிவர்த்தனையாகக் கருதும் கலாச்சாரம் மாற வேண்டும்.

கல்வியில் பணத்தை முதலீடு செய்து ஓரிரு வாரங்களில் முடிவுகளை எதிர்பார்க்காதீர்கள். இவை நீண்ட கால முதலீடுகள் மற்றும் அரசாங்கம் இந்த முதலீடுகளை செய்கிறது. கல்வி அமைச்சும் அதன் துணை நிறுவனங்களும் கல்விக் கொள்கைத் துறையில் முடிவெடுக்கும் இடமாக மாற வேண்டும். இந்தக் கொள்கைகள் மற்றும் முடிவுகள் தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். தனிப்பட்ட கருத்துக்கள் அல்லது உணர்வுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முடியாது. தரவுகளை சேகரிக்கவும் பராமரிக்கவும் ஒரு அமைப்பு தேவை.

அதிகாரிகள் கருணை காட்ட வேண்டும். சேவைக்காகக் காத்திருக்கும் மக்கள் அழுவதைப் பார்க்கிறோம். அதிகாரிகள் கேட்பதில்லை சரியாக பேசுவதில்லை கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த முறையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிரதி கல்வி அமைச்சர் கலாநிதி மதுர சேனவிரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ மற்றும் கல்வி நிபுணர்கள் குழுவும் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post