வரவு செலவு திட்டம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு

 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் அமைச்சு மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செலவினப் பிரிவுகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து ஆராயும் கூட்டம் கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கூட்டப்பட்டது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, டி.பி. விக்கிரமசிங்க, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இடம் பெற்றனர்.




Previous Post Next Post