சித்திரை புத்தாண்டுக்கு முதல் உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தல் : ஜனாதிபதி

எதிர்வரும் ஆண்டில் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.


இதற்காக வேட்புமனுக்களை மீண்டும் அழைப்பது நல்லது என அவர் மேலும் கூறினார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரரை சந்தித்த பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மேலும் மாகாண சபை தேர்தலும் அடுத்த ஆண்டில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post