கனடாவின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.
அவர் நிதி அமைச்சராகவும் ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எழுதிய கடிதத்தில் கனடா தற்போது பல முக்கிய சவால்களை எதிர்கொண்டு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் எதிர்கால திட்டங்கள் குறித்து அவர் மற்றும் பிரதமர் ட்ரூடோவுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளதாக ஃப்ரீலேண்ட் தெரிவித்தார். ட்ரூடோ ஃப்ரீலேண்ட் அவர்களை வேறு ஒரு பொறுப்புக்கு மாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக ட்ரூடோவின் அமைச்சரவையில் இருந்து விலகுவது தான் நேர்மையான மற்றும் சாத்தியமான தீர்வாகும் என அவர் முடிவு செய்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.