அமெரிக்கா உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக வழங்கிய அதிநவீன எப்-16 விமானம் ரஷ்யா சுட்டுவீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை இதுகுறித்து தெரிவித்தனர். ஸபோரிஷியா பகுதியில் பறந்துகொண்டிருந்த எப்-16 விமானம் ரஷ்யா நடத்திய தாக்குதலால் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த விமானம் ரஷ்ய நிலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த தயாராக இருந்த போது அது சுட்டுவீழ்த்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் உறுதியாகினால் இது உக்ரைனின் இரண்டாவது எப்-16 போர் விமானமாகும். இதற்கு முன்பு ரஷ்யாவுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு வழங்கப்பட்ட எப்-16 விமானங்களில் ஒன்று கடந்த ஓகஸ்ட் மாதம் ரஷ்யா நடத்திய தாக்குதலின்போது விழுந்து நொறுங்கியது.