கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் இரவு நேர அஞ்சல் தொடருந்தில் மோதிய ஒருவர் உயிரிழந்துள்ளார். தெம்மோதரை தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள சுரங்கத்தில் இன்று காலை அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்தவர் தெமோதரை – சௌதம் தொழிற்சாலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.