அல்லு அர்ஜுன் நடித்த "புஷ்பா" திரைப்படம் 2021 இல் வெளிவந்து மிகவும் பிரபலமானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 5ம் தேதி 12,000 தியேட்டர்களில் வெளியானது. அதற்கு முன்னதாக கடந்த 4ம் தேதி இரவு 10:30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் "புஷ்பா 2" சிறப்பு காட்சி நடந்தது. அல்லு அர்ஜுனும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தங்களது ரசிகர்களுடன் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றனர். படத்தை பார்க்காமல் பல ரசிகர்கள் இவர்களை பார்ப்பதற்காக முட்டி மோதினர். 35 வயதான ரேவதி என்ற பெண்ணும், அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜாவும் குடும்பத்துடன் படம் பார்க்க வந்திருந்தனர். துரதிர்ஷ்டவசமாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த கூட்ட நெரிசலில் சிக்கியதால் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சுயநினைவு இழந்து மூச்சுவிடவோ பேசவோ முடியாமல் தவித்தனர்.
பின்னர் அவர்களுக்கு உதவிய போலீசார் அவர்களை உதவிக்காக ஆர்டிசி கிராஸ் ரோடு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் ரேவதியைப் பார்த்தபோது அவள் ஏற்கனவே இறந்துவிட்டாள் என்று எல்லோரிடமும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
எல்லோரின் கவனத்தையும் இந்த நிகழ்வு ஈர்த்ததால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவுவதற்காக அல்லு அர்ஜுன் ரூபா 25 லட்சத்தை வழங்கினார். மேலும் ரேவதி என்ற பெண் இறந்த வழக்கை ரத்து செய்யுமாறு அல்லு அர்ஜுன் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் இன்று அல்லு அர்ஜுனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் என்ன நடந்தது என்று அவரிடம் கேள்விகள் கேட்டுள்ளனர்.
அல்லு அர்ஜுனை அவரது வீட்டில் இருந்து போலீசார் அழைத்துச் சென்றனர். அவரை போலீஸ் காரில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர். அவருடன் தியேட்டர் உரிமையாளர் மற்றும் மேலாளரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது சிலர் புகார் அளித்ததால் சிக்கட்பள்ளி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். திரையரங்கில் அனுமதியின்றி ஒரு சிறப்புத் திரைப்படம் திரையிடப்பட்டதால் பெரும் கூட்டம் கூடி ஒரு பெண் காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். யாரோ வேண்டுமென்றே தவறு செய்திருக்கலாம் என்று கருதுவதால் போலீசார் இப்போது விசாரணைகளை தொடங்கியுள்ளனர் .