விபத்துக்கு உள்ளான ஏர் கனடா விமானம் : பயணிகள் பத்திரமாக மீட்பு

ஏர் கனடா விமானம் கியர் செயலிழப்பால் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் ஆபத்தான முறையில் தரையிறங்கிய சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பான மேலும் தகவல்கள் : பிஏஎல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கீழ் இயக்கப்படும் ஏர் கனடா 2259 விமானம் கனடாவின் செயின்ட் ஜான்ஸில் இருந்து ஹாலிஃபாக்ஸுக்கு பயணிகளுடன் இன்று [29-12] வந்துகொண்டிருந்தது.

தரையிறங்கும் போது கியர் செயலிழந்ததால் விமானம் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் உரசிக் கொண்டு தரையிறங்கியது. இதனால் ஓடுபாதையில் தீப்பொறி பறக்கவும் விமானத்தின் இறக்கைகள் உரசுவதற்கான வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளன.

வீடியோவை பார்வையிட

இதன் காரணமாக எஞ்சின் பகுதி தீப்பற்றியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி அதிஷ்டவசமாக பயணிகள் அல்லது பணியாளர்களிடையே எந்த உயிரிழப்பும் இல்லை.

Previous Post Next Post