யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோயால் 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் ஒரு ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளிகள் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த நோயால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.