நற்ப்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நுஹு லெப்பை மொஹமட் முபீஸ் (வயது 28) என்பவர் தான் ஆசிரியராகப் பணியாற்றிய புல்மோட்டை மத்திய கல்லூரியில் உள்ள தனது அறையில் கடந்த 6 ஆம் திகதி புதன்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
புதன்கிழமை காலை பள்ளி வருகைப் பதிவு முறையில் தனது வருகையைக் குறித்த பின்னர், அவர் வகுப்பறைகளுக்குச் சென்று 10:30 மணி வரை கற்பித்தார். பின்னர் அவர் தனது இடமாற்றம் குறித்து மாகாண ஆளுநரை சந்திக்க திருகோணமலைக்கு செல்வதாக மாணவர்களுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் பள்ளி நாள் முடிந்ததைத் தொடர்ந்து பிற்பகல் 3:30 மணி வரை அவர் புறப்பட்டதை இயந்திரத்தில் பதிவு செய்யவில்லை.
இதற்கிடையில், அவரது மனைவி அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார், ஆனால் எந்த பதிலும் இல்லாததால் அவர் தனது கணவரின் இருப்பிடம் குறித்து விசாரிக்க பள்ளி அதிபரை தொடர்பு கொண்டார் .
அதிபரும் ஆசிரியர்களும் குறித்த ஆசிரியர் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தனர். இதயத்தை உடைக்கும் காட்சியை மட்டுமே கண்டனர். அவர் அசையாமல் கிடந்தார், அவரது காற்ச்சட்டை மற்றும் உள்ளாடைகள் அவிழ்க்கப்பட்டிருந்தது . மற்றும் அவரது கால்களில் இரத்த காயங்களுடன் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து புல்மோட்டை பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டதுடன் சட்ட அமலாக்கப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவ இடத்தை பரிசோதித்த மரண விசாரணை அதிகாரியின் பணிப்புரைக்கு இணங்க முழுமையான பிரேத பரிசோதனைக்காக சடலம்முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.