உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நாடாகவும் உள்ள அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை காண உலகமே ஆவலுடன் உள்ளது. நாளை (5) அதற்கான தேர்தல் இடம் பெற உள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது அப்போது அதிபராக இருந்து குடியரசு கட்சியின் ட்ரம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அதிபர் ஆனார். ஆட்சி காலம் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்த அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த முறையும் பைடனுக்கும் ட்ரம்புக்கும் இடையே போட்டி என தொடங்கிய தேர்தல் களத்தில் ட்ரம்பின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது .ஜோ பைடன் உடல் நிலையால் அவர் சார்ந்த ஜனநாயக கட்சிக்குள்ளேயே சலசலப்பு ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினர். ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். இருவருக்கும் இடையேயான விவாதத்தில் கமலாஹாரிஸின் பதில்கள் பலரையும் கவர்ந்தன. அமெரிக்காவின் பல்வேறு பிரபலங்களும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பல கோடீஸ்வர தொழிலதிபர்களும் கமலா ஹரிசுக்கு ஆதரவளித்தனர். உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான மாஸ்க் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து ட்ரம்பின் கையும் ஓங்கியது. பரப்புரையின் போது அதிபர் வேட்பாளர் ரம்பை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரம் இனவாதத்தையும் கையில் எடுத்தார். பண வீக்கத்தை விட எல்லை பாதுகாப்பு முக்கியமானது என முழங்கினர். முதியோருக்கு வரிச்சலுகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். பதிலுக்கு கமலா ஹதீஸ் முன்னாள் அதிபர் ரம் சர்வாதிகாரி என்றும் மனித உரிமைகளையும் பெண் உரிமைகளையும் மதிக்காதவர் என்றும் சாட்டினார். நடுத்தர மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் விலைவாசிகளை குறைப்பேன் என்றும் வரி சீர்திருத்தத்தை செய்வேன் என்றும் கமலா ஹாரிஸ் வாக்குறுதி அளித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க 18 கோடிக்கு அதிகமான அமெரிக்கர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் கமலஹாரிஸ் வெற்றி பெற்றால் 290 ஆண்டு கால அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பமாக அமையும். அதிபராக வெள்ளை மாளிகை நுழையும் முதல் பெண் என்ற பெருமையையும் அதிபராக முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையையும் கமலா ஹாரிஸ் பெறுவார்.