கொக்கெய்ன் போதைப்பொருளை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




கொக்கெய்ன் போதைப்பொருள் தொடர்பான சம்பவம்  ஒன்றில் வெளிநாட்டு பிரஜை ஒருவரும் மேலும் மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி துறைமுக பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து தெற்கு அதிவேக வீதியின் பின்புற நுழைவாயிலுக்கு அருகில் அக்மீமன பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவுடன் (5ம் திகதி) காலை மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையின் போது சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 32 வயதுடைய தல்பே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவரே இந்த சந்தேக நபர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் பொரல பிரதேசத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் உன்னிப்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கொக்கெய்ன் விநியோகத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கையின் விளைவாக மொத்தம் 672 கிராம் நிறையுடைய  40 கொக்கைன் பைக்கெட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயத் தாள்களும் கைப்பற்றபட்டன.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டு சந்தேக நபர் சியரா லியோ  52 வயதுடையவர் எனவும், மற்றைய சந்தேக நபர் பொரல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

Previous Post Next Post