காலநிலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




மாலை அல்லது இரவு நேரங்களில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோர பகுதிகளில் காலை நேரத்திலும் மழை பெய்யக்கூடும்.


மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க கவனம் செலுத்த வேண்டும் என வளிமண்டளவியல் திணைக்களம் கூறியுள்ளது.

Previous Post Next Post