சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி ஆற்றில் நீர் பெருக்கெடுத்துச் செல்வதாகவும் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எமக்கு தெரிவித்துள்ளது.
திருகோணமலை மற்றும் பொலன்னறுவையில் ஆற்றுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வலியுறுத்தப்பட்டு உள்ளனர்.
வேரகந்தோட்டை, மானம்பிட்டி என சில இடங்களில் மகாவலி ஆறு நிரம்பி வழிகிறது என்று DMCயின் பிரதிப் பணிப்பாளர் திரு.பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். கிண்ணியா, கந்தளே, தமன்கடுவ, திம்புலாகலை பிரதேச மக்களையும் அவதானமாக இருக்க வேண்டினார்.
ராஜாங்கனை நீர்த்தேக்கம் என்ற பெரிய நீர் தேக்க இடத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் மல்வத்து ஓயா ஆற்றுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.