திங்கட்கிழமை (28) நடந்த நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வது தனது முக்கிய கடமைகளில் ஒன்றாக இருக்கிறது என்று கூறினார்.
இலங்கைக்கான பயணத் தடையை அமெரிக்கா வெளியிடவில்லை. ஆனால் மறு அறிவித்தல் வரும்வரை அமெரிக்கர்கள் அறுகம் வளைகுடா பகுதியை தவிர்க்க வேண்டும் என பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று ஜூலி சுங் கூறியுள்ளார்.
சமீபத்திய பாதுகாப்பு எச்சரிக்கையின் காரணமாக உருவான பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்க தூதரகம் தொடர்ந்து ஒத்துழைக்கிறது என்று சுங் தெரிவித்தார். இலங்கையின் குடிமக்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு ஆதரவாக தொடர்ந்து இணைந்து செயல்படுவதாகவும் அவர் உறுதியளித்தார்.