ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் : மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்

கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் நடத்திய  ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் நாட்டின் ராணுவ தளங்கள் மீது விமான தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.  இந்தத் தாக்குதல் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளதாக அந்த நாட்டின் ராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.




 இதற்கு பதிலளித்த ஈரான் இஸ்ரேலின் தாக்குதலை தாங்கள் முறியடித்ததாக குறிப்பிட்டதுடன் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான பதிலடி வழங்கப்படும் எனவும் ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது .இதில் பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. 

Previous Post Next Post