லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று செய்தியாளர்கள் உயிரிழந்தனர். தெற்கு லெபனானில் ஹஸ்பையா என்ற பாதுகாப்பான இடத்தை இஸ்ரேல் தாக்கியதில் அவர்கள் காயமடைந்து இறந்தனர்.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் பற்றி செய்தி சேகரிக்க முயன்ற வேளை குறித்த நிருபர்கள் தாக்குதலின் போது காயமடைந்து உயிர் இழந்ததாக உலக ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.