இணையவழி மோசடிகள் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 இலங்கை கணினி அவசர பதில் மன்றம், வட்ஸ்அப் ,பேஸ் புக் மற்றும் பிற சமூக ஊடகங்கள் மூலம் வரும் போலிச் செய்திகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுள்ளது.





இலங்கை கணினி அவசரநிலைப் பதில் மன்றம் கூறியதாவது, இணையக் குற்றவாளிகள் போலியான இணையதளங்கள், சமூக ஊடகங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள். 

அதற்கேற்ப, நன்கொடைகள், ரொக்க பரிசுகள், அதிர்ஷ்டக் குலுக்கல், இணையத்தில் அதிக லாபம் தரும் பொருட்களை வழங்குதல், பாதுகாப்பு வழங்குதல் போன்றவற்றுக்குப் பதிவு செய்ய வாட்ஸ்அப் செய்திகளின் மூலம் போலி தகவல்கள் அனுப்பப்படுகின்றன.


அவர்கள் வழங்கும் இணைப்புகளை கிளிக் செய்தால், உங்கள் கணினி மற்றும் மொபைல் போன்களில் உள்ள தகவல்களை திருடுவதற்கான வாய்ப்பு உள்ளது, மேலும் பல்வேறு மோசடிகள் மற்றும் பண மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். மக்களை அவதானமாக செயல்படும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான இணையவழி திருட்டுகள் பண்டிகை காலங்களில் அதிகம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post