இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள தம் நாட்டு பிரஜைகள் மீது இலங்கையில் வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அரசாங்கம் கொடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து இலங்கையில் பிரபலமான சுற்றுலாதலங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதாரத்தின் பெரும்பகுதி சுற்றுலாப் பயணிகளில் வருகையில் தங்கியுள்ளது . கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சி அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை எதிர்கொண்ட பாரிய பொருளாதார பின்னடைவின் பின்னர் இப்போது சுற்றுலா பயணிகளின் வருகை சற்று உயர்வடைந்து இருந்த நிலையில் இந்த எச்சரிக்கை அனைவரையும் கவலை அடைய செய்துள்ளது. எனினும் எல்லோரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.