கனடாவின் ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற கார் தீ விபத்தில் நான்கு இந்தியர்கள் உயிரிழப்பு.
இந்த விபத்து தொடர்பாக தெரிய வருவது இரவு வேளையில் வேகமாக பயணித்த ரெல்சா எலக்ட்ரிக் கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு சுவரில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அந்தக் கார் தீப்பிடித்தது.
காரின் பற்ரறியில் ஏற்பட்ட தீயே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
காரில் பயணித்தவர்களில் நால்வர் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர். மற்றும் பலத்த காயங்களுக்கு உள்ளான 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.