ஸ்பெயின் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அன்று கொட்டிய கடும் மழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸ் இந்த அனர்த்தத்தில் சில குடிமக்கள் காணாமல் போய் உள்ளதாக தெரிவித்த அவர் மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் வெளியில் நடமாடுவதை தவிர்க்கும் படியும் கேட்டுக்கொண்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் ஒரு அவசரகால நெருக்கடி குழுவை அமைத்துள்ளது.
Pic: AP
வலென்சியா நகரத்தின் காட்சிகள் சேறு கலந்த வெள்ள நீர் சுவர்களை இடித்து செல்வதையும் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களை அடித்து செல்வதையும் காட்டின. சில இடங்களில் சில மணி நேரங்களில் 12 அங்குலத்துக்கு மேலான மழை பொழிவு பதிவாகியுள்ளது. ஸ்பெயின் வானிலை ஆய்வு மையம் இடியுடன் கூடிய தொடர் மழை இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.